மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் வெளிநாட்டு நபரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு வெளிநாட்டு நபரை கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட நபரிடமிருந்து மருத்துவ நடைமுறையை பின்பற்றி ஆய்வு நடத்திய போதை பொருள் தடுப்பு அமைப்பு ரூ.1 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.