வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற போது ராணா கபூரின் மகள் விமான நிலையத்தில் நிறுத்தம்..!
தனியார் வங்கியான “யெஸ் வங்கி” அதிகமான கடன்களை கொடுத்ததால் வாராக்கடன் அதிகரித்துள்ளது. இதனால் நெருக் கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் ஒட்டு மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கும் படியும் ,மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும் வரை இதை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக ராணா கபூரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இதையெடுத்து நேற்று மும்பையில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதிகள் நாளை மறுநாள் வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தனர்.இந்நிலையில் நேற்று மும்பை விமான நிலையத்தில் ராணா கபூரின் மகள் ரோஷிணி வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.