Tag: MOHAMMAD SHAMI

“நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” ! உடற்தகுதி குறித்து மனம் திறந்த முகமது ஷமி!

சென்னை : கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் முகமது ஷமி சிறப்பாக விளையாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஷமிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இதன் காரணமாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து காலில் ஏற்பட்ட அந்த காயத்திற்கு அறுவை சிகிச்சையும் அவர் மேற்கொண்டார். அதன் பின் நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் […]

BCCI 5 Min Read
Mohammad Shami

முகமது ஷமி முதல் ரொனால்டோ அணியின் தோல்வி வரை! இன்றைய நாளின் விளையாட்டு செய்திகள்!

சென்னை : இன்றைய நாளின் (19-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், ரஞ்சி கோப்பை தொடரில் ஷமி விளையாடவுள்ளார் எனும் தகவல் முதல் சவூதி கால்பந்து தொடரில் ரொனல்டோ அணியின் தோல்வி வரை உள்ள சூடான முக்கிய சினிமா செய்திகளைப் பார்க்கலாம். ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி..! கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இடைப்பட்ட நிலையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் அவர் விளையாடவில்லை. தற்போது அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், இவர் வரவிருக்கும் […]

#Praggnanandhaa 9 Min Read
TOP Sports News

#SAvIND: ஷமியின் அசத்தலான பந்துவீச்சு… 197 ரன்களுக்கு தென்னாபிரிக்கா ஆல் அவுட்!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னின்னிஸில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் இன்று […]

1st Test 5 Min Read
Default Image

ஷமியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும்….தோள் கொடுக்கும் தல எம்.எஸ்.டோனி…

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜகான்  சுமத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹேந்திர சிங் டோனி இந்த நிலையில் ஷமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் . “ஷமியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் மிகவும் நல்லவர். அவரால் நாட்டிற்கும் மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது” என்று டோனி கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

india 2 Min Read
Default Image

இந்தியா கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் விவகாரம்!கடைசியாக பிசிசிஐ -யின் உதவியை நாடிய போலீஸ் …

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கொல்கத்தா போலீசார், கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களைத் தருமாறு  கேட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி. இவர், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் அவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். […]

india 6 Min Read
Default Image

பாகிஸ்தான் பெண்ணை துபாய் சென்று சந்தித்தாரா ஷமி?பிசிசிஐ-யை உதவியை நாடிய கொல்கத்தா போலீஸ்….

மேலும் ஒரு சிக்கலில் முகமது ஷமிக்கு. பல்வேறு பெண்களுடன் தொடர்புள்ளது, அவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப் படுத்துகின்றனர் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனைவி ஜஹான் அளிக்க போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள முகமது ஷமி  தற்போது மீண்டும்  மாட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்கா முடிந்தவுடன் மொகமது ஷமி எங்கு சென்றார் என்பதைக் கண்டறிய விசாரணை செய்து வரும் கொல்கத்தா போலீஸ் குழு தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியுள்ளது. ஷமி மனைவி அளித்த புகாரின்படி தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு […]

india 3 Min Read
Default Image

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது மனைவி மேலும் ஒரு பகீர் புகார்!

ஹசின் ஜஹான் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி, தன்னை அவரது சகோதரரின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக  புதிய பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். பல்வேறு பெண்களுடன் ஷமிக்கு தகாத உறவு இருப்பதாகவும், தட்டிக் கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், ஷமி மீது பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷமி மீது மேலும் ஒரு பரபரப்பு புகாரை ஜஹான் […]

india 3 Min Read
Default Image

இந்திய வீரர் முகமது ஷமி மீது கொல்கத்தா போலீஸில் புகார்!

காவல் நிலையத்தில் இந்திய  வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக அவரது மனைவி  ஹசீன் ஜஹான் கொல்கத்தா  புகார் அளித்துள்ளார். கொல்கத்தா லால்பஜார் காவல்நிலையத்தில் ஹசீன் ஜஹான் கொடுத்துள்ள புகாரில் முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2 ஆண்டுகளாக தன்னை சித்திரவதை செய்வதாகவும், தாக்குவதாகவும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் மனைவிக்கான குறைந்த பட்ச மரியாதையைக் கூட […]

india 3 Min Read
Default Image

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நீக்கம்? பி.சி.சி.ஐ. அதிரடி?

பி.சி.சி.ஐ.யின் ஊதிய ஒப்பந்தத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி பல்வேறு புகார்களை கூறியதன் விளைவாக, அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதை தட்டிக் கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவரது மனைவி ஹாசின் ஜஹான், பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் முகமது ஷமியின் பெயர் […]

BCCI 3 Min Read
Default Image

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கு பல பெண்களுடன் தகாத உறவு ?மனைவி பகீர் புகார்….

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மனைவி,அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும்  பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். முகமது சமிக்கும், ஹாசின் ஜஹானுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தமது பேஸ்புக் பக்கத்தில் பல பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்ட ஹாசின் ஜஹான், அந்த புகைப்படங்களில் உள்ள பெண்களுடன் தமது கணவருக்கு தகாத உறவு இருப்பதாக பகீர் புகார் கூறியுள்ளார். […]

india 4 Min Read
Default Image