முகமது ஷமி முதல் ரொனால்டோ அணியின் தோல்வி வரை! இன்றைய நாளின் விளையாட்டு செய்திகள்!

TOP Sports News

சென்னை : இன்றைய நாளின் (19-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், ரஞ்சி கோப்பை தொடரில் ஷமி விளையாடவுள்ளார் எனும் தகவல் முதல் சவூதி கால்பந்து தொடரில் ரொனல்டோ அணியின் தோல்வி வரை உள்ள சூடான முக்கிய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்.

ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி..!

கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இடைப்பட்ட நிலையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் அவர் விளையாடவில்லை. தற்போது அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், இவர் வரவிருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்றும் அதற்கு முன் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவோம் – ஜெய்ஷா..!

இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்துப் பேசிய பிசிசிஐயின் தலைமைச் செயலாளரான ஜெய்ஷாவும், ‘ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நிச்சயமாக, ஹாட்ரிக் வெற்றியை நாம் பெறுவோம்’ எனக் கூறி இருக்கிறார்.

இலங்கை மகளீர் அணியை வீழ்த்திய அயர்லாந்து மகளீர் அணி ..!

இலங்கை மகளீர் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் மூன்று 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட தொடரானது நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியை அயர்லாந்து அணி வென்ற நிலையில், 2-வதாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் இலங்கை அணியை 15 ரன்களில் வீழ்த்தி, 2-0 எனத் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

 SA vs WI : புதிய சாதனை படைத்த தென்னாபிரிக்கா..!

தென்னாபிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ்ஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளை தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ட்ரா ஆனது. அதன்பின் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தொடக்கம் முதல் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவி உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் தொடர்ந்து 10-வது முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

150-வது ஆண்டை கொண்டாட போகும் மெல்போர்ன் மைதானம் ..!

கடந்த 1877 ஆண்டில் மெல்போர்னில் உருவானது தான் பல டெஸ்ட் போட்டிகளுக்கு பெயர் போன மெல்போர்ன் மைதானம். இதில் முதல் போட்டியாக ஆஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது. தற்போது, வரும் 2027 ஆண்டு வந்தால் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாகச் சிறப்புப் போட்டியாக ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இங்குப் போட்டி நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ராபிட் செஸ் : பிரக்ஞானந்தா வெளியேற்றம் ..!

அமெரிக்காவில் நடைபெற்று வந்த செயின்ட் லூயிஸ் ராபிட் செஸ் தொடரில் பல நாடுகளின் க்ராண்ட்மாஸ்டர்கள் விளையாடி வந்தனர். அதில் இந்தியாவின் இளம் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவும் விளையாடி வந்தார். இந்த தொடரின் தொடக்கம் முதலே இவருக்குக் கடுமையான போட்டிகளைச் சந்தித்த இவர் தற்போது 12.5 புள்ளிகள் பெற்று கடைசி இடம் பிடித்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார்.

சவூதி சூப்பர் கோப்பை : இறுதி போட்டியில் ரொனல்டோ அணி படுதோல்வி ..!

சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அல்-நாசர் அணியும், அல்-ஹிலால் அணியும் நேற்று மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 44-வது நிமிடத்தில் ரொனல்டோ முதல் கோல் அடித்து முன்னிலைப் படுத்தினார். அதன்பிறகு, இரண்டாம் பாதியில் கடுமையாக விளையாடிய அல்-ஹிலால் அணி 4 கோல்களைப் பதிவு செய்தது. இதனால், அணி இறுதியில் 4-1 எனப் போட்டியில் வெற்றி பெற்று அல்-ஹிலால் அணி கோப்பையைத் தட்டி சென்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்