கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் விஜேபாஸ்கரின் சொத்து மதிப்பு 6.5 மடங்கு அதிகரித்து உள்ளது என்பது வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பலரும் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த வேட்புமனு தாக்கலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். இதனால் தங்கள் […]
செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செவிலியர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் எம்.ஆர்.பி.யில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செவிலியர்களின் பணி நிரந்திரம் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியின் […]
பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா இருக்கின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவருடைய சளி மாதிரி புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வின் முடிவு வந்த […]
கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூடுதலாக 118 அவசர ஊர்தி வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. ஏற்கனவே, கொரோனா காலத்தில் செயல்பட 1005 ஆம்புலன்ஸுகள் தங்குதடையின்றி கட்டணமில்லாமல் இயங்கி வந்த நிலையில், தற்போது கூடுதலாக நவீன வசதியுடன் கூடிய 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. […]
முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் தலைமையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.கொரோனா நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கேற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கபப்டுகிறது.மேலும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு முதலமைச்சர் ஆரோக்கியம் […]
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் […]