நிச்சியமாக செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் – விஜயபாஸ்கர்
செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
செவிலியர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் எம்.ஆர்.பி.யில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செவிலியர்களின் பணி நிரந்திரம் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆதலால், செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவர்.
தற்போது கூட தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை வாங்கியிருக்கிறோம். அதில், அதிகமான காலியிடங்களில் நிரந்திர பணியிடங்களும் உள்ளது. அதனால், செவிலியர்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்க அதிகம் வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.