ஆன்லைனில் டிக்கெட்: ‘லியோ’ வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு பயங்கர கட்டுப்பாட்டுடன் காவல்துறை!

leo Kerala

விஜய்யின் ‘லியோ’ வெற்றிவிழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. லியோ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (நவம்பர் 1ஆம் தேதி) கொண்டாட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவருகின்றனர். உலகம் முழுவதும் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், … Read more

லியோ 1000 கோடியை தொடாது! தயாரிப்பாளர் சொன்ன தகவலை கேட்டு ஷாக்கான விஜய் ரசிகர்கள்!

Lalit Kumar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மக்களுக்கு  மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்து முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருந்தது. இந்த திரைப்படம் அதற்கு அடுத்த நாளிலேயே இரண்டு நாட்களை சேர்த்து 220  வசூல் … Read more

கார் எல்லாம் வேண்டாம் பா..அது மட்டும் போதும்! நெகிழ வைத்த விஜய்!

lalith kumar and lokesh kanagaraj

தமிழ் சினிமாவில்  சமீபகாலமாக திரைப்படங்கள் வெற்றி அடைந்து விட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஹீரோ மற்றும் இயக்குனருக்கு கார்களை கிப்ட் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் என்ற முறையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு காரை பரிசாக கொடுத்திருந்தார். அதைப்போல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு கார்கள் … Read more

லியோ படத்தை பார்த்துவிட்டு கால் செய்த ரஜினிகாந்த்! அதுவும் யாருக்கு தெரியுமா?

leo vijay rajini

விஜய் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 210-கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மிரட்டல் சாதனை! ஆனாலும் ‘2.0’ சாதனையை முறியடிக்காத ‘லியோ’! இந்த நிலையில், மக்களை போலவே திரைப்பிரபலங்கள் பலரும் … Read more

அனுமதியின்றி லியோ பட பேனர் வைக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

leo vijay theatre

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு  நாள் வெளியாகவுள்ள நிலையில், அனுமதியின்றி லியோ திரைப்படத்தின் பேனர் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், திண்டுக்கலில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், லியோ திரைப்பட பேனர்களை அனுமதியின்றி எந்த இடத்திலும் வைக்கக்கூடாது … Read more

LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

chennai high court - vijay

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாக நாளை … Read more

4 மணிக்கு ரிலீஸ் ஆகுமா லியோ? நாளை உயர்நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை !

LEO

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகின்ற 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு … Read more

கோப்ரா பட இயக்குநரின் பெரிய மனசு.! தயாரிப்பாளருக்கு செய்த உதவி.!

கோப்ரா பட இயக்குநரான அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40 சதவீதம் வரை குறைத்ததாக கூறப்படுகிறது. விக்ரம் தற்போது  நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, லால், மிர்னாலினி, பத்மபிரியா, கனிகா, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் … Read more