லியோ 1000 கோடியை தொடாது! தயாரிப்பாளர் சொன்ன தகவலை கேட்டு ஷாக்கான விஜய் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்து முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருந்தது.
இந்த திரைப்படம் அதற்கு அடுத்த நாளிலேயே இரண்டு நாட்களை சேர்த்து 220 வசூல் செய்ததன் காரணமாக படம் 1000 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்று சாதனையை படைக்கும் என விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
இதற்கிடையில், லியோ திரைப்படம் 1000 கோடி எல்லாம் வசூல் செய்யாது என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” லியோ திரைப்படம் நல்ல ஓபனிங் எங்களுக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் படம் 1000 கோடி வசூலை நெருங்குமா என்பது சந்தேகம் தான் ஏனென்றால் இந்தியில் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த திரைப்படத்தை பார்க்க தமிழகத்தில் இருந்து 2 லட்சம் பேர் மட்டுமே வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கிறது. எனவே அதிகாலை நாலு மணி காட்சிக்கு அனுமதி வாங்க நிறைவே முயற்சி செய்தோம் அது நடக்க முடியாமல் போய்விட்டது. எனவே தமிழகத்தை போல மற்ற மாநிலங்களிலும் அதே நேரத்தில் படத்தை வெளியிட விஜய் கூறினார்’என லலித் குமார் கூறியுள்ளார்.
லியோ திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், லலித் குமார் இப்படி கூறியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், லியோ திரைப்படம் தமிழில் வரவேற்பு கிடைத்தது போல மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.