கார் எல்லாம் வேண்டாம் பா..அது மட்டும் போதும்! நெகிழ வைத்த விஜய்!

lalith kumar and lokesh kanagaraj

தமிழ் சினிமாவில்  சமீபகாலமாக திரைப்படங்கள் வெற்றி அடைந்து விட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஹீரோ மற்றும் இயக்குனருக்கு கார்களை கிப்ட் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் என்ற முறையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு காரை பரிசாக கொடுத்திருந்தார்.

அதைப்போல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு கார்கள் மற்றும் காசோலையை பரிசாக வழங்கி இருந்தார்கள்.

லியோ படத்தை பார்த்துவிட்டு கால் செய்த ரஜினிகாந்த்! அதுவும் யாருக்கு தெரியுமா?

ஆனால், இவர்களுக்கு முன்பே மாஸ்டர் மற்றும் லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் மாஸ்டர் படத்தின் வெற்றியின் போதே விஜய்க்கு காரை பரிசாக வழங்க முடிவு செய்து இருந்தாராம். ஏனென்றால், மாஸ்டர் திரைப்படம் வெளியான சமயத்தில் தான் கொரோனா பரவல் எல்லாம் நீங்கி திரையரங்கு மீண்டும் திறக்கப்பட்டது. அந்த சமயத்தில் மாஸ்டர் படம் அனைவர்க்கும் லாபத்தை கொடுத்தது.

#LeoIndustryHit : பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் ‘லியோ’! 2 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

எனவே, இதன் காரணமாக தான் விஜய்க்கு அந்த சமயமே கார் வாங்கி கொடுக்க முடிவு செய்து உங்களுக்கு நான் கார் வாங்கி தரவா சார் என்ன கார் சார் வேணும் உங்களுக்கு என்று கேட்டாராம் . அதற்கு விஜய் கார் எல்லாம் எனக்கு வேண்டாம் பா எனக்கு எதுக்கு பா கார் நீ எனக்கு படத்தில் நடிக்க சம்பளம் கொடுத்துவிட்டாய் இதற்கு மேல் என்ன வேணும் வேறு எதுவும் வேண்டாம் என கூறிவிட்டாராம்.

விஜய் கார் வேண்டாம் என்று கூறியவுடன் லலித் குமார் அவரை பார்த்து ஆச்சரியாமாகிவிட்டாராம். இந்த தகவலை லலித் குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். கார் வாங்கி கொடுக்கிறேன் என்று தயாரிப்பாளர் சொல்லியும் கார் வேண்டாம் என விஜய் கூறியுள்ளது அவருடைய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் விஜய்யை பாராட்டி வருகிறார்கள்.  மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக்கியுள்ள லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்