சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் […]
கடந்த 5 நாட்களாக நீடித்த சோதனைக்கு பிறகு திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூரில் ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, ஹோட்டல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வரை 5 நாட்களாக சோதனை நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், அவரது […]
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 5 நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தான் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். கடந்த 2009ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரானார். அந்த சமயத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்நது […]
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தான் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இதன்பின், 2009ல் திமுகவில் இணைந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரானார்.அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 2020ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு […]
அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுலவகம், கல்லூரி உளிட்ட பல்வேறு இடங்கள் , ஜெகத்ரட்சகன் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு சில வீடுகளில் சோதனை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, […]
சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை அடையாறில் உள்ள திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுபோன்று, தி.நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டல், வேளச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி, மேலும் ஜெகத்ரட்சகனுக் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் வருமான […]
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகனின் ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது. கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கை ரத்து செய்யக் […]