திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்.!

DMK MP Jagadratsaka fined Rs 908 crore

சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நடந்த விதிமீறல்களுக்கு இந்தியாவில் உள்ள சொத்துக்களை முடக்க FEMA சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை கையகப்படுத்தியதிலும் இலங்கை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததிலும் இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறி, ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்