#BREAKING: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்..!
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகனின் ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது.
கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, அவரது மகன், மகள், உட்பட ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் இதுவரை விசாரணைக்கு யாரும் ஆஜராக வில்லை எனதெரிவித்தனர்.
அதற்கு ஜெகத்ரட்சகன் தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், ஜெகத்ரட்சகன் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டு நேற்றைய தான் வீடு திரும்பி உள்ளார். அவரை தொடர்ந்து வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனார்.
இதனால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிபதி ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி முன்பு ஆஜராகி காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டு என உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்
ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்..! pic.twitter.com/nwLzPg325r— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 12, 2020