தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனு இன்று விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் திரையரங்கில் 100 […]
7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது கோரிய வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல் இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் […]
கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடுமணல் தொடர்பாக நெல்லை காமராஜ் என்பவரும் , புதுக்கோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது. அப்பொழுது,கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் மொழியை சார்ந்தவை, ஆனால் இது தொடர்பான பணிக்கு சமஸ்கிருதம் அறிந்தவர்கள் ஏன் பணியில் இருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.பின்னர் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த […]
7.5% இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு ,பின்பு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் ,அதற்கு ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது தமிழக […]
விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூர்யா பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அவரது வழக்கில்,தமிழகம் முழுவதும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்,விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சமாக அதிகாரிகள் வாங்குவதாகவும் என்று தெரிவித்தார். விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை […]
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வரும் 16-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.ழ் இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற […]
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . அரசு பள்ளி […]
மத்திய தொல்லியல்துறை பட்டய படிப்புக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகின்றது,சமீபத்தில் இந்த நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது.அந்த விளம்பரத்தில், முதுகலைப் பட்டம் பெற்று இருப்பவர்கள் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிறகு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் […]
தந்தை -மகன் வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதலில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில […]
மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அவரது மனுவில்,வைகை நதிக்கரை பகுதியில் அமைந்துள்ள இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது.விவசாய பகுதிகளில் அரசின் அனுமதியை மீறி சவுடு மணல் எடுப்பதாக தெரிவித்தார்.மேலும் விவசாய நிலங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே மணல் […]
விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்கவும்,பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை பார்வாயாக எடுத்துச் செல்வதோ, சிலைகளை கரைப்பதோ […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற கிளை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் […]
பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ […]
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக இதன் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது .ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நேரிலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் […]
கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்த மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் மளிகைகடைகள்,காய்கறிக்கடைகள் உள்ளிட்டவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதனால் வணிக வளாகங்கள்,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. எனவே போலீசார் இதனை தடுக்க தமிழகம் […]
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக இதன் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து கீழமை நீதிமன்ற பணிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கபப்ட்டது .ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நேரிலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் அவசர வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று […]
மேலவளவு கொலை வழக்கில் 13 பேரும் வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.அதில் 2008-ம் ஆண்டு அண்ணா […]