நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது .
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு குறித்த கமிட்டி பரிந்துரையை அமல்படுத்திய பிறகு வெளியிட வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.இதனையடுத்து அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை.