மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வரும் 16-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.ழ்
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதன் நிலை என்ன என்பது குறித்து ஆளுநரின் செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்பு இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் அவகாசம் வேண்டும் என்றும் சட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார் .அரசுப்பள்ளியில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் குறித்த வழக்கு இது என்றும்ஒரு மாதமாக நடவடிக்கை இல்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.இறுதியாக16-ஆம் தேதிக்குள் ஆளுநர் செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .