சிம்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பல உதவிகளை செய்வது வழக்கம். சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தால் அவர்களுக்கு பண உதவிகளை சிம்பு செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக, மறைந்த நடிகர் தவசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட சிம்பு உதவி செய்தார். அதனை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல காமெடி நடிகரான வெங்கல் ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2 லட்சம் […]
வெங்கல் ராவ் : தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடிக்க வருவதற்கு முன்பு ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு கடினமான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தவர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என பலருக்கும் டூப் போட்டு நடித்து இருக்கிறார். ஸ்டண்ட் சீன்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் ஒருமுறை இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க முடியாமல் ஆனது. இதன் காரணமாக […]
KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் […]
தற்போதைய காலகட்டத்தில் சாலையில் நடந்து செல்வது என்பது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய ஒரு வேலையாகவே இருக்கிறது. ஏனென்றால் வாகனங்கள் வேகமாக வந்து செல்வது ஒருபுறமிருக்க, ஆங்காங்கே சாலைகளில் சில மேடு பள்ளங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பீகார் மாநிலம் பாட்டனாவை சேர்ந்த பெண்ணொருவர் சாலையில் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். அவருக்கு முன்பதாக ஒரு ஆட்டோ சென்றதால் அவர் ஆட்டோவின் பின் நடந்து சென்றுள்ளார். எனவே, கீழே இருந்த குழியை அவர் கவனிக்க மறந்து விட்டார். எனவே, […]
“பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இருந்தாலும்,கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது என்றும்,கொரோனா நிவாரண நிதியை அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொண்டனர் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் […]
பெண் ஆய்வாளர் சிரிசா யாரும் வராததால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன் இணைந்து முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த காசிப்பா நகராட்சியின் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிப்பா காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளார். அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கி இருந்த நிலையில், பலரும் அந்த […]
முறிந்த கைகள் மற்றும் உடைந்த முதுகெலும்புடன் தேநீர் கடை நடத்தும் முதியவர். டெல்லியில், துவாரகா செப்டர் 13 பகுதிக்கு அருகில், வயது முதிர்ந்த ஒருவர், முறிந்த கை, உடைந்த முதுகெலும்புடன், தனது மனைவியுடன் இணைந்து சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதுகுறித்து, ஃபுடிவிஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘குடிபோதையில் இருந்த இந்த முதியவரின் மாகாண, முதியவரை தாக்கியதில், அவரது கை முறிக்கப்பட்டுள்ளது. கைகள் உடைந்த நிலையில், முதியவர் வீட்டில் இருந்து […]
மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றம். ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் இதைத் தொடந்து, நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 […]
இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், ஏழை, எளிய மக்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சாய் தீனா ஊரடங்கால் அவதியுறும் 250 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, சாம்பார் பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார். மேலும், சென்னையில் தேசியநகர் பகுதியில் வாழும் மக்களுக்கு வேண்டும் உதவிகளை வழங்க […]
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் நடன கலைஞர் என பன்முக தன்மை கொண்டவராக வளம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மேலும், இவர் பலருக்கும் தனது உதவி கரத்தை நீட்டி வருகிறார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இந்த குழந்தைக்கு 1 வயது ஆகிறது. தற்போது இந்த குழந்தைக்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரி நடைபெறவுள்ளதால், […]
ரத்தன் நிமிஸ் என்ற ஒருமாத குழந்தை நோய் தடுப்பாற்றல் குறைப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்.காரணம் அவருக்கு பிறப்பிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்திருக்கிறது. தற்போது அவருடைய நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.இது உடம்பின் மற்ற பாகங்களுக்கும் பரவ நேரிடும்.மேலும் இதற்கான சிகிச்சை முறையான “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை-க்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை தேவைப்படுகிறது.ரத்தனின் குடும்பம் நடுத்தர குடும்பம் ஆகும்.பெற்றோரின் பின்னணி நடுத்தர பின்னணி ஆகும்.ஆகவே அவர்களுக்கு […]