கை, கால் செயலிழந்துவிட்டது...ரொம்ப கஷ்ட படுறேன் உதவி பண்ணுங்க! வெங்கல்ராவ் உருக்கம்!

வெங்கல் ராவ் : தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடிக்க வருவதற்கு முன்பு

Vengal Rao

வெங்கல் ராவ் :தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடிக்க வருவதற்கு முன்பு ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு கடினமான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தவர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என பலருக்கும் டூப் போட்டு நடித்து இருக்கிறார்.

ஸ்டண்ட் சீன்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் ஒருமுறை இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க முடியாமல் ஆனது. இதன் காரணமாக காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்து நகரம், கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், நீதி ரீதியாக மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் இதுவரை காமெடியான காட்சிகளில் நடித்து நம்மளை சிரிக்க வைத்து கொண்டிருந்த அவருக்கு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. சிகிச்சைக்கு தனக்கு உதவி செய்யுங்கள் எனவும் உருக்கமாக பேசியுள்ளார்.

unknown node

Vengal Rao [file image]இது குறித்து அவர் வீடியோவில் பேசியதாவது ” எனக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விட்டது. என்னால் நடக்கவே முடியவில்லை. சரியாக என்னால் வாயை வைத்து கூட பேசமுடியவில்லை. எனக்கு சினிமா தொழிலார்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் உங்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்யுங்கள். மாத்திரை வாங்குவதற்கு கூட பணம் இல்லை, மருத்துவமனைக்கு செல்ல கூட என்னிடம் பணமில்லை. ரொம்பவே கஷ்டபடுகிறேன்.எனவே எனக்கு உதவி செய்யுங்கள்” என உருக்கமாக பேசியுள்ளார்.