மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றம்!
மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றம்.
ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் இதைத் தொடந்து, நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், அச்சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நிவாரண பொருட்கள் வழங்கி செய்துள்ளனர்.