உத்திரப்பிரதேச பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தும் தலைமை ஆசிரியர்!! வைரலாகும் வீடியோ.. உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சோஹவ்ன் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யும் படியும், இல்லையெனில் கதவை பூட்டிவிடுவேன் என்று கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. Primary School […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கோவில்பட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57) இவர், தூத்துக்குடி […]
பண மோசடி புகார் காரணமாக சேலத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெங்கடேசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வாருகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து, இவர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்டம் […]
இன்று நடைபெறவிருந்த தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ராமநாதபுரம் கிடாத்திருக்கை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஜோக்கப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 2020-ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தால் பலருக்கு புதிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய […]
மாணவர்களுக்கு இலவசமாக செல்போன் வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியர். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கை தொடங்கியது. பஸ் வசதியில்லாத இக்கிராமத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் […]
மதுரையில் உள்ள ஒரு ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மது போதையில் பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த பெற்றோர், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அடுத்து உள்ளது வலைச்சேரிப்பட்டி. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இன்று செயல்பட்டு வருகிறது. 23 மாணவர்கள் பயின்று வரும் அந்த பள்ளியில் கோட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், குமரேசன் என்பவர் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டாம் பட்டியை சார்ந்தவர் சுந்தரவேல் இவரது மகன் அருண்குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். தற்போது மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் அருண்குமார் காப்பியடித்தற்காக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து அருண்குமாரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சக மாணவர்கள் முன் காப்பியடித்ததற்காக அடித்து உள்ளார். தலைமையாசிரியர் தன்னை அடித்ததை தன் பெற்றோர்களிடம் கூறி அருண்குமார் கதறி அழுது உள்ளார். இந்நிலையில் மனமுடைந்த […]
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முக்கட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் , இதர மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று குழந்தைகள் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பள்ளியில் படிக்கும் தர்ஷினி என்ற மாணவியை ஒருநாள் தலைமையாசிரியராக அறிவிக்கப்பட்டார். தலைமையாசிரியராக அறிவிக்கப்பட்ட மாணவியை அனைத்து ஆசிரியர்களும் ஓன்று சேர்ந்து தலைமையாசிரியர் இருக்கையில் அமரவைத்தனர்.பின்னர் மாணவி முன் அமர்ந்து இருந்த ஆசிரியர்கள் தங்களது […]
மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சொட்டி சிங். இம்மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ ,மாணவியர்கள் வனத் துறையினருடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்த விழாவிற்கு மாவட்ட கல்வி அதிகாரி போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சொட்டி சிங் அழைக்கப்பட்டார். சொட்டி சிங்கை வரவேற்பதற்காக மாலைகள் வாங்கி வந்திருந்தனர். அந்த மாலையை பள்ளி தலைமையாசிரியர் பி.எஸ் சவுகான் […]