#BREAKING: தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை!

இன்று நடைபெறவிருந்த தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் கிடாத்திருக்கை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஜோக்கப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் 2020-ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தால் பலருக்கு புதிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும்.
பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனவே பதவி உயர்வு கலந்தாய்வு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று நடைபெறவிருந்த தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பள்ளி கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த வழக்கை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025