பண மோசடி புகார் : சேலத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

பண மோசடி புகார் காரணமாக சேலத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெங்கடேசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வாருகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து, இவர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு மாணவர் விடுதிகளில் சமையல் பணிக்கு போலியாக ஆள் நியமனம் செய்தது தொடர்பாகவும் இவர் மீது புகார் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அரசு பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் அவர்கள் வீட்டில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025