நடப்பு சாம்பியனுக்கு பின்னடைவு… உலகக்கோப்பை தொடரில் ரீஸ் டாப்லி விலகல்..!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார். நேற்று நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி மோசமான ஆட்டம் … Read more

#INDvsNZ : மிட்செல் அடித்த மிரட்டல் சதம்! இந்தியாவுக்கு நியூசிலாந்து வைத்த அதிரடி டார்கெட்?

CWC23 ind vs nz

உலகக்கோப்பை 2023 : இன்று நடைபெற்று வரும் 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும்  9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 5 முறையும்,  இந்தியா 3 முறையும் வென்றுள்ளது. 1 லீக்போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதே சமயம் இதுவரை 20 ஆண்டுகளாக உலக கோப்பை தொடர்களில் நியூசிலாந்து  அணியை இந்திய அணி தோற்கடித்தது இல்லை. கடைசியாக 2003 … Read more

#INDvsNZ : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா!

INDvsNZ toss

உலகக்கோப்பை 2023-யின் 21-வது லீக் போட்டி இன்று  தர்மஷாலா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும்  9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 5 முறையும்,  இந்தியா 3 முறையும் வென்றுள்ளது. 1 லீக்போட்டி மழையால் கைவிடப்பட்டது. அது மட்டுமின்றி, இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்தது. இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது இதனால் இறுதிப்போட்டிக்கு … Read more

#INDvsNZ : இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லை! அவருக்கு பதில் களமிறங்குவது இந்த வீரர் தான்!

hardik pandya

உலகக்கோப்பை 2023 : இன்று நடைபெறும் 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள்  தர்மஷாலா மைதானத்தில் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அருமையான பார்மில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த இரண்டு அணிகளும் இதுவரை 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், 4 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி புள்ளி விவரபட்டியலில் முதலிடத்தில் … Read more

பந்து வீச்சில் மிரட்டிய தென்னாபிரிக்கா.. 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி..!

இங்கிலாந்து அணி 22 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை தொடரின் 20-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக  டி காக் , ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். … Read more

68 ரன்னில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறும் இங்கிலாந்து..!

உலகக்கோப்பை தொடரின் 20-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக  டி காக் , ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய  2-வது பந்திலேயே டி காக் 4 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் ஹென்ரிக்ஸ் , வான் … Read more

#ENGvSA : கிளாசெனின் அதிரடி… தென்னாபிரிக்கா 399 ரன்கள்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

Heinrich Klaasen

உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 85 … Read more

#ENGvSA : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு!

ENGvSA

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 20ஆவது லீக் போட்டியில் இன்று ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் தேம்பா பவுமா இடம்பெறாததால் ஐடன் மார்க்ராம் தென்னாபிரிக்கா கேப்டனாக செயல்படுகிறார். இங்கிலாந்து நடப்பாண்டு உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளில் … Read more