#ENGvSA : கிளாசெனின் அதிரடி… தென்னாபிரிக்கா 399 ரன்கள்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

Heinrich Klaasen

உலகக்கோப்பை தொடரின் 20வது லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ராம் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்பின், ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ராம் ஜோடி நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. பின்னர்  இருவரும் 60 மற்றும் 42 ரன்களுக்கு வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 67 பந்துகளில் 107 (12 பவுண்டரி, 4 சிக்ஸ்) ரன்கள் எடுத்து அணியை பெரிய இலக்கை நோக்கி கொண்டு சேர்த்தார். இதுவரை இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கஸ் அட்கின்சன் ஓவரில் போல்ட் ஆனார். இதனிடையே, டேவிட் மில்லர் விக்கெட்டை விட, மார்கோ ஜான்சன் அவரது அதிரடியான ஆட்டத்தால் 75 ரன்களை குவித்தார்.

இறுதியாக தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ரீஸ் டோப்லி 3, கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே, இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நக்கி களமிறங்கியுள்ளது. இதனால், இங்கிலாந்து பேட்டிங்கில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்