68 ரன்னில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறும் இங்கிலாந்து..!

உலகக்கோப்பை தொடரின் 20-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

Featured image

உலகக்கோப்பை தொடரின் 20-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.

தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக  டி காக் , ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய  2-வது பந்திலேயே டி காக் 4 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் ஹென்ரிக்ஸ் , வான் டெர் டஸ்ஸன் இருவரும் கூட்டணி அமைக்க  இவர்களின் கூட்டணியில் 121 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், வான் டெர் டஸ்ஸன் 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஹென்ரிக்ஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  85 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனால்,  3 விக்கெட்டை இழந்து தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் எடுத்திருந்தது. மத்தியில் களமிறங்கிய கிளாஸன்,  மார்க்ரம் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.  மார்க்ரம் 42 ரன்களும்,  கிளாஸன் 109 ரன்கள் எடுத்தார். கடைசியில் இறங்கிய யான்சன் சிறப்பாக விளையாடி 75*ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ரீஸ் டோப்லி 3, கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி தொடக்க வீரர்களாக  ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான் இருவரும் களமிங்க  வந்த வேகத்தில் இருவரும் ஜானி பேர்ஸ்டோவ் 10, டேவிட் மலான் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். ஜோ ரூட் 2,  பென் ஸ்டோக்ஸ் 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய  ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் கூட்டணி  சற்று விளையாட இவர்களின் கூட்டணியை ஜெரால்ட் கோட்ஸி பிரித்தார்.  ஜெரால்ட் கோட்ஸி வீசிய 11 ஓவரில் ஹாரி புரூக் 17, ஜோஸ் பட்லர் 15 ரன்னில் இருவரும்  விக்கெட்டை  இழந்தார்கள் தற்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை பறிகொடுத்து 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தென்னாபிரிக்கா அணியில்  மார்கோ ஜான்சன் , ஜெரால்ட் கோட்ஸி தலா 2 விக்கெட்டை பறித்தனர்.