#INDvsNZ : இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லை! அவருக்கு பதில் களமிறங்குவது இந்த வீரர் தான்!

hardik pandya

உலகக்கோப்பை 2023 : இன்று நடைபெறும் 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள்  தர்மஷாலா மைதானத்தில் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அருமையான பார்மில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த இரண்டு அணிகளும் இதுவரை 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், 4 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி புள்ளி விவரபட்டியலில் முதலிடத்தில் இருக்கும். ஏற்கனவே நியூசிலாந்து அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது ஏனென்றால், அந்த அணி இந்தியாவை  விட ரன்ரேட் அடிப்படையில் அதிகமாக உள்ள காரணத்தால் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் சூர்யகுமார் மற்றும் ஷமி அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடைசியாக இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் மோதிய போட்டியில் ஷமிக்கு பதிலாக ஷார்துல் தாகூர் இடம்பெற்று இருந்தார். இதனையடுத்து இன்று நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் ஷார்துல் தாகூருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷமி  அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

இன்று இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை..! வீழ்த்தப்போவது யார் ..? வீழப்போவது யார் ..?

அதைப்போல, ஹர்திக் பாண்டியாவுக்கும் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி அட்டகாசமான பார்மில் இருப்பதால் இன்று நடைபெறும் போட்டியிலும் அவருடைய பேட்டிங் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும்  9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 5 முறையும்,  இந்தியா 3 முறையும் வென்றுள்ளது. 1 லீக்போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்தது. இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்