Tag: corona infection

டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று .., ரத்து செய்யப்பட்ட புனே பயணம்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் 15 வது தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இரண்டும் மோத உள்ளன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியில் ஏற்கனவே இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவதாக டெல்லி கேப்பிடல் அணியை சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே டெல்லி கேப்பிடல் அணி வீரர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே […]

corona infection 2 Min Read
Default Image

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரச அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அவரச அறிவிப்பில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டியிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் விரைவில் உடல்நலம் பெற்று உங்களையெல்லாம் தொகுதியில் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

corona infection 2 Min Read
Default Image

பெல்ஜியம் பூங்கா: பெண் சிங்கத்திற்கு கொரோனா..!

பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுள் ஒன்றான டாணா எனப்படும் பெண் சிங்கத்திற்கு காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை இருந்துள்ளது. பின்னர் சோதனை செய்ததில் இந்த பெண் சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கத்திற்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அங்கிருக்கும் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கங்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று […]

Belgium 2 Min Read
Default Image

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி …!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வந்தாலும், தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு அடைந்து ஓமைக்ரான் வகை கொரோனாவாக பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. ஆனால், தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் […]

corona infection 3 Min Read
Default Image

பெல்ஜியம் உயிரியல் பூங்கா : இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி …!

பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. தற்பொழுது வரையிலும் இந்த வைரஸின் தாக்கம் குறையாத நிலையில், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் இந்த கொரோனா தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் பெல்ஜியத்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]

Belgium 3 Min Read
Default Image

“முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும்”- மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜான ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

சென்னை:கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார். அமெரிக்கப் பயணத்தை முடிந்துவிட்டு நாடு திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு,அதன்பின்னர் லேசான இருமல் இருந்ததையடுத்து,பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,நவம்பர் 22 ஆம் தேதியன்று அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து,கொரோனா பாதிப்பால் சிசிக்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளதாக நவ.26 […]

#MNM 11 Min Read
Default Image

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர். மா.சுப்பிரமணியன்!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஓமைக்ரான் எனும் புதிய வகையாக உருமாறி பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

corona infection 3 Min Read
Default Image

மகாராஷ்டிரா உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி …!

மகாராஷ்டிரா உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக நாட்டில் அதிக அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை மந்திரி திலீப் […]

#Maharashtra 4 Min Read
Default Image

24 மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம் – உத்தர பிரதேச முதல்வர்!

உத்தர பிரதேச மாநிலத்தில் 24 மாவட்டத்தில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்பொழுது கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்பொழுதும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தற்பொழுதும் கட்டுக்குள் இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அலிகார், அமேதி, அம்ரோஹா, அயோத்தி, பாக்பத், […]

corona infection 3 Min Read
Default Image

டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்;முதல் கொரோனா பாதிப்பு …!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதற்காக ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும்,இங்கு தினமும் கொரோனா பரிசோதனைகள்,விதிமுறைகள் போன்றவை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.ஏனெனில்,டோக்கியோவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க […]

corona infection 6 Min Read
Default Image

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் – அரசு அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசு அறிவித்துள்ளது.அதன்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் […]

corona infection 7 Min Read
Default Image

புறப்பட்டது ஆம்புலன்ஸ்…ராஜகிரியில் துவங்கிய பயணம் இன்று நிறைவு…

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் துரைக்கண்ணு அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.  விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில […]

#Death 4 Min Read
Default Image

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்…

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர […]

#Death 3 Min Read
Default Image

2வது அலை வீச தொடங்கியதா?? முடங்கியது ஐரோப்பி நாடுகள்

கொரோனா பரவலின் 2வது அலை தற்போது  ஐரோப்பிய நாடுகளை தாக்கி வருகிறது.அதன்படி  பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொடூரமாக வீசி வரும் 2வது அலையால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்க மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2வது முறையாக முழு ஊரடங்கை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன்படி தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் நாட்டில் கொரோனா […]

2nd wave of corona 4 Min Read
Default Image

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக […]

corona infection 2 Min Read
Default Image

நன்றிகள்….மீண்டுவிட்டேன்…பாதுகாப்பாக இருங்கள்.!

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் பிரித்விராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் குணமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டது. இன்னும் ஒருவாரத்திற்கு மட்டும் தனிமையில் இருப்பேன் அதன் பின்னர் வழக்கமான பணிகளில் ஈடுபட உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். Tested negative on the Antigen […]

actor Prithviraj 2 Min Read
Default Image

துணைமுதல்வர்-க்கு கொரோனாத் தொற்று

பீகார் மாநில துணை முதல்வர்  சுஷில் குமார்  மோடிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் அக்., 28ந்தேதி இடைத்தேர்தல் மொத்தம் 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. 71 இடங்களுக்கு அக்.,28ந்தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 3 ஆம் தேதி 94 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீதமுள்ள 78 இடங்களுக்கு மூன்றாம் கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீகாரில் […]

#BJP 4 Min Read
Default Image

குணமடைந்த நடிகை தமன்னா-நன்றி கூற வார்த்தையில்லை-நெகிழ்ச்சி

நடிகை தமன்னா கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டார். நடிகை தமன்னாவிற்கு  கொரோனா தொற்று அறிகுறிகளிலுடன் ஐதராபாத்தில்  கான்டினன்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தமன்னா தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டார். இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் […]

corona infection 3 Min Read
Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராக்கு தொற்று உறுதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த அக்.,7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா  பங்கேற்று இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

#AIADMK 2 Min Read
Default Image

கொரியாவில் கொரோனாவே கிடையாது அதிபர் கிம் ஜங் -ஷாக்கில் சர்வதேசம்

நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியாக்கியுள்ளார். சீனாவில்  ஹூபேய் மாகாணம் வுகான் நகரத்தில்  கடந்த ஆண்டு டிசம்பரில் உலகையே அச்சிறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது.இது தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தகைய கொடிய வைரஸ் 3 கோடிக்கும்  அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு […]

corona infection 4 Min Read
Default Image