தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி …!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வந்தாலும், தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு அடைந்து ஓமைக்ரான் வகை கொரோனாவாக பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. ஆனால், தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 737 பேர் ஒரே நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,31,235 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26,86,683 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,539 ஆகவும் உள்ளது. தற்போது தமிழகத்தில் 8,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.