24 மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம் – உத்தர பிரதேச முதல்வர்!
உத்தர பிரதேச மாநிலத்தில் 24 மாவட்டத்தில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்பொழுது கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்பொழுதும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தற்பொழுதும் கட்டுக்குள் இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அலிகார், அமேதி, அம்ரோஹா, அயோத்தி, பாக்பத், பல்லியா, பண்டா, பஸ்தி, பிஜ்னோர், சித்ரகூட், தியோரியா, ஃபதேபூர், காஜிபூர், கோண்டா, ஹமிர்பூர், ஹர்தோய், ஹத்ராஸ், லலித்பூர், மஹோபா, முசாபர்நகர், பிலிபித், ராம்பூர், ஷமாலி மற்றும் சீதாபூர் ஆகிய 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.