வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர். மா.சுப்பிரமணியன்!

The Minister of People's Welfare said that the corona has been confirmed for the three who came to Tamil Nadu from abroad. Ma Subramanian said.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஓமைக்ரான் எனும் புதிய வகையாக உருமாறி பரவி வருகிறது.

இந்த ஓமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது எந்த வகையான உருமாறிய கொரோனா பாதிப்பு என்பது குறித்து நான்கு நாட்களில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.