சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு நேற்று நள்ளிரவு கசிவு ஏற்பட்டது. இதனால் மக்கள் மூச்சிதிணறல் ஏற்பட்டு அவதியில் இருக்கிறார்கள். இந்த அமோனியா வாயு கசிவு ஏற்பட முக்கிய காரணமே கடலுக்கு அடியில் இருந்து தொழிற்சாலைக்கு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு தான் என தெரியவந்துள்ளது. எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு […]
பருவகாய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுதுவம் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 வாரங்கள் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 16,516 முகாம்கள் நடைபெற்றுள்ளன. 7,83,443 பேர் பயன்பெற்றுள்ளனர். 3772 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன . இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நடைபெற மருத்துவ முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர். […]
வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு […]
அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் கொரோனா சிகிச்சை ஒத்திகை பணிகளை சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் அதே போல கொரோனா சிகிச்சை ஒத்திகை நடைபெறுகிறது. […]
அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கபட்டது. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில் தமிழகத்தின் மருத்துவ சேவை பற்றி பெருமையாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், இந்திய அளவில் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக அரசும் , தமிழக மருத்துவத்துறையும், தனியார் மருத்துவ […]
மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குகைதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சைகள் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட […]
தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும்.- சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம். சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ மேலும் சில இடத்திற்கு பரவாமல் தடுத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ […]
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் […]
200 இடஙக்ளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதன் மூலம் 89,000 பேர் பயன்பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அவை இன்னும் அதிகரிக்கப்படும். – அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் எழுகிறது இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், […]
இந்த வருடம் 90 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லை. அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையாக மாறும் . – அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சுமார் 7,100 கோடி ருபாய் செலவில் வெள்ள நீர் தடுப்பு பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்த […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று (ஜூலை 21) வழங்கப்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் பிரித்து வழங்கினார். இது தொடர்பாக அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “4 லட்சம் […]
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.அப்போது வழக்கமான ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஆங்கிலத்தில், சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஒருவர் தவறுதலாக பதிவிறக்கம் செய்து விட்டதாகவும்,மருத்துவ கல்வி இயக்குனரகம் […]
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக […]
சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தீர்மானங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள நிலையில்,அமைச்சர்கள் ஆளுனரை சந்தித்துள்ளனர்.
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது. 50% இட ஒதுக்கீடு: இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அரசு மருத்துவர்களுக்கான […]
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தற்போது கொரோனா மட்டும் ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக […]
16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, ஜனவரி 3-ம் தேதி போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் துவங்கி வைக்கிறார். 16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி […]
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஓமைக்ரான் எனும் புதிய வகையாக உருமாறி பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
தமிழகம்:சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 6,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.அமைச்சர் சேகர்பாபு மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.இதனையடுத்து,செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது: “சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் கே.கே.நகர் வாக்குச்சாவடிக்கு சென்று பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிராக அப்போதைய அதிமுக அரசால் போடப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.மேலும்,10 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை […]