கர்நாடகாவில்கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது. பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவுகள் வந்ததும் விசாரணை நடத்தப்படும் என தகவல். கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா எனும் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் குல்பர்காவிலுள்ள கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உறங்கிக்கொண்டிருந்த இந்தப் பெண்மணியை […]
ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியில், கொரோனா கவச உடை அணிந்தவாறு ஓய்வெடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவும் நாயகனாக வலம் வருபவர்கள் தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். இவர்கள் இரவு பகல் பாராது ஒவ்வொருவருடைய உயிரையும் கரங்களில் சுமந்தவாறு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கின்றனர். அவர்களுக்கு உணவு உண்ணவோ? ஓய்வெடுக்கவோ நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இந்நிலையில் மணிப்பூரை சேர்ந்த கோலன் என்பவர் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை பாதி வழியிலேயே விட்டு சென்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர். ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த திருவுரு மண்டலத்தில் உள்ள முனுகுல்லா கிராமத்தில் வசிப்பவர் ஷேக் சுபானி (40), இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, அவர் கோவிட் பரிசோதனைக்காக ராஜுகுதேம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய நிலையில், சுபானி மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமராவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையை அவர் அடைந்த நிலையில், அவர் இறந்து […]
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சுசீலா திவாரி மருத்துவ கல்லூரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் என்பவர் தனது மன அழுத்தத்தை போக்க திருமண ஊர்வலத்துடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதில் […]
உத்திரப்பிரதேசத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனை வார்டுக்கு வெளியே விட்டு சென்றதால் ,உடலை கைவண்டி உபயோகித்து கொண்டு சென்றுள்ளனர் . உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் நகரில் உள்ள கான்ஷிராம் காலனியில் வசிக்கும் நசீம் என்ற பெண்ணிற்கு செவ்வாயன்று மார்பு வலி ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் . மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸின் உள் இருந்த அவசர மருத்துவ அதிகாரியான டாக்டர் அகிலேஷ் குமாரிடம் பெண்ணை பரிசோதிக்குமாறு குடும்பத்தினர் கேட்டு […]