ஆபத்து நிறைந்த வேலை தான்…! ஆனாலும் மகிழ்ச்சி அடைகிறேன்…! இணையத்தில் வைரலாகும் அம்புலன்ஸ் ஓட்டுனரின் புகைப்படம்…!
ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியில், கொரோனா கவச உடை அணிந்தவாறு ஓய்வெடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவும் நாயகனாக வலம் வருபவர்கள் தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். இவர்கள் இரவு பகல் பாராது ஒவ்வொருவருடைய உயிரையும் கரங்களில் சுமந்தவாறு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கின்றனர். அவர்களுக்கு உணவு உண்ணவோ? ஓய்வெடுக்கவோ நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
இந்நிலையில் மணிப்பூரை சேர்ந்த கோலன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியில், கொரோனா கவச உடை அணிந்தவாறு ஓய்வெடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இது என்னுடைய இளம் வயது நண்பன் சங்முயான். இவருக்கு வயது 24 தான். சுரசந்த்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் இவருக்கு ஒரு நாள் சம்பளம் 248 ரூபாய் தான். தன்னுடைய வாழ்க்கையே பணயமாக வைத்து இந்த பணியை செய்து வருகிறார். இதுபோன்ற முன்கள பணியாளர்களுக்கு நாம் உதவவேண்டும்.’ என்று அந்தக் ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.
This is my young friend Sangmuan, 24 yo, after multiple trips. Engaged as ambulance driver under CMO Churachandpur, he earns Rs 248 per day. Putting their lives at risk, with zero extra incentives, frontline workers needs our support. @NBirenSingh @health_manipur@Vumlunmang pic.twitter.com/TdgqhEJRYr
— Golan Naulak (@GolanNaulak) May 7, 2021
இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து சங்மியான் கூறுகையில், கடந்த 6 மாதங்களாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகவும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணியை செய்து வருகிறேன். அதிக டிரிப் போனதால், அசதியாக இருந்தது அதனால் கொஞ்சம் ஓய்வெடுத்தேன். இந்த புகைப்படத்தை யார் எடுத்தது என்பது கூட எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘நேரமெல்லாம் இல்லை, காலையில் ஆறு மணிக்கு கூட போன் வரும் நான் போய் நோயாளிகளை அழைத்து வருவேன். வாரத்தில் ஏழு நாட்களும் வேலை இருக்கும். எனது வேலையில் ஆபத்து இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் இடத்தில் இருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.