கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை பாதி வழியிலேயே விட்டு சென்ற அம்புலன்ஸ் ஓட்டுநர்…! சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்….!

Default Image

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை பாதி வழியிலேயே விட்டு சென்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர். 

ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த திருவுரு மண்டலத்தில் உள்ள முனுகுல்லா கிராமத்தில் வசிப்பவர் ஷேக் சுபானி (40), இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, அவர் கோவிட் பரிசோதனைக்காக ராஜுகுதேம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.  அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய நிலையில், சுபானி மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமராவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையை அவர் அடைந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது மனைவி உடலை கிராமத்திற்கு கொண்டு செல்லாமல்,  ஆம்புலன்ஸ் டிரைவரிடம் உடலைக் கிராமத்தின் புறநகரில் விட்டுவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அம்புலன்ஸ் ட்ரைவர் இறந்தவரின் மனைவி சொன்ன இடத்தில் விட்டு சென்றுள்ளனர்.  சடலம் சாலையில் சிறிது நேரம் இருந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் இது இந்த சம்பவம் தொடர்பாக அறிந்து இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘மே 11, 2021 செவ்வாய்க்கிழமை கிருஷ்ணா மாவட்டத்தில்  ராஜுகுதேம் அரசு மருத்துவமனையில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க சுபானி என்பருக்கு, ஆக்சிஜன், படுக்கைகள் கிடைக்காததால், அமராவதி மருத்துவமனைக்கு 11:28 அளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின் நோயாளியின் மனைவி இறந்தவரை சாலையோர இடத்தில் இறக்கி விடுமாறு ஆம்புலன்ஸ் ஊழியரை கேட்டுக்கொண்டார். அவர்களின் ஆம்புலன்ஸ் ஊழியர் அவர்களை இறக்கிவிட்டனர். நோயாளியின் உறவினர்கள் ஒரு எழுத்துப்பூர்வ கடிதத்தை, இறந்தவரின் மனைவியின் ஒப்புதலுடன் அளித்துள்ளனர். அதில் தங்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தான், அந்த இடத்தில் இறக்கி விட்டதாகவும், 108 ஊழியர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் ஒப்புக் கொண்டார்கள்.’ என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்