கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது!

Ambulance driver arrested for sexually harassing Corona patient in Karnataka The driver who sexually harassed the corona was informed that the investigation will be conducted after the results of the examination.

கர்நாடகாவில்கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  ஆம்புலன்ஸ் டிரைவர் கைது.

பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவுகள் வந்ததும் விசாரணை நடத்தப்படும் என தகவல்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா எனும் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் குல்பர்காவிலுள்ள கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உறங்கிக்கொண்டிருந்த இந்தப் பெண்மணியை அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரேம் சாகர் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அலறியடித்த பெண்மணியின் குரல் கேட்டு, அருகில் இருந்த மற்ற நோயாளிகள் சாகரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து பிரமபூர் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதுடன், இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவுக்கு வந்த பின் அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.