ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். 22 வயதான ஜானிக் சின்னர் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்திய ஜானிக் சின்னர் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வெடேவ்-ஐ 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களையும் டேனில் கைப்பற்றி ஜானிகிக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்..! 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று போபண்ணா சாதனை
இருந்த போதிலும் மனம் தளராமல் எழுச்சியுடன் விளையாடிய ஜானிக் சின்னர் கடைசி மூன்று செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் ஜானிக் சின்னர் நான்காவது இடத்திலும், டேனில் மெட்வெடேவ் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node