ரோஜர் ஃபெடரர், லண்டனில் நடந்த லேவர் கோப்பை போட்டியுடன் நேற்று கண்ணீர் மல்க டென்னிஸ் போட்டியிலிருந்து விடை பெற்றார்.
டென்னிஸ் உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் 41 வயதான ரோஜர் ஃபெடரர், லேவர் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஃபெடரர், நேற்று ரஃபேல் நடாலுடன் ஜோடி சேர்ந்த இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார்.
போட்டிக்குப் பிறகு ரோஜர் ஃபெடரர், தனது ரசிகர்கள் மற்றும் ஐரோப்பா அணி வீரர்களுக்கு நன்றி கூறி கண்ணீருடன் விடை பெற்றார். மேலும் அவர் “நாம் இதை விரைவில் கடந்து செல்வோம் இல்லையா?” என்று பேட்டியின் போது கூறினார்.
ரஃபேல் நடாலும், இந்த நிகழ்வில் கண்ணீருடன் காணப்பட்டார். ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் தனது பிரியாவிடை கூறிய போது, நடாலும் கண்ணீரை அடக்க முடியாமல் வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு ரசிகர் தனது டிவீட்டில், என் வாழ்க்கையில் இந்த தருணத்தை மறக்க முடியாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பகிர்ந்துள்ள டிவீட்டில், நட்புக்குப் பிறகு டென்னிஸ் இரண்டாம் பட்சம் தான் என்று கூறியுள்ளார்.
unknown node