ஆம் உண்மைதான்.! கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா கர்ப்பமாகி உள்ளதை தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஹர்திக் பாண்டியா ஏற்கனவே தெரிவித்தார் அது உங்களுக்கே தெரியும். நடாஷா தமிழில் ‘அரிமா நம்பி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நான் உன்னில் பாதி’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தற்போது நடாஷா கர்ப்பமாகி உள்ளதை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெவித்துள்ளார். ஆம் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விரைவில் தந்தையாக போகிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு நடாஷாவும் நானும் ஒன்றாக இருந்து ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது இன்னும் சிறப்பாக வரப்போகிறது என்றும் ஒரு புதிய வாழ்க்கையை மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் வரவேற்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அணைத்து பிரபலங்களும் வாழ்த்துக்களை தங்களது தெரிவித்து வருகிறார்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்