ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!

Yashasvi Jaiswal: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக

Featured image

Yashasvi Jaiswal: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக ஜெய்ஸ்வால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Read More –IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.

Read More –IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.

Read More –சொன்னதை செய்த ஆனந்த் மஹிந்திரா ! பிரக்யானந்தாவிற்கு சொகுசு கார் !

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.