U-19 உலகக்கோப்பை: அயர்லாந்து-ஜிம்பாப்வே போட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

Default Image

U-19 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து-ஜிம்பாப்வே இரு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது  நிலநடுக்கம் உணரப்பட்டது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில்  குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் போது மைதானத்தில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. அயர்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீரர்கள் சற்று பதற்றமடைந்தனர். இருப்பினும், சிறிது நேரத்தில் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரீஸ், ஆறாவது ஓவரின் ஐந்தாவது பந்தை பிரையன் பென்னட்டிடம் வீசிய போது நில நடுக்கம் உணரப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் போட்டி பாதிக்கப்படவில்லை. வர்ணனையாளர்கள் நேரடி ஒளிபரப்பின் போது அவர்கள் அனுபவித்த நடுக்கம் குறித்தும் பேசினர்.

அயர்லாந்து ஜிம்பாப்வேயை வீழ்த்தியது:

இந்த போட்டியில் அயர்லாந்து ஜிம்பாப்வேயை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேட் பைனலுக்கு முன்னேறியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 48.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து  விளையாட களமிறங்கிய அயர்லாந்து அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்