நாளை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
unknown nodeஅக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்தது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்கிய இந்திய அணி ,கேப்டன் கோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 326 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.கேப்டன் கோலி 140 ரன்களும் , துணை கேப்டன் ரோஹித் சர்மா 152 ரன்களும் எடுத்தனர்.இந்நிலையில் நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.அதேபோல் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருகின்றது.