அவரு அடிக்கிற அடி அப்படி இருக்கு...அபிஷேக் சர்மாவை புகழ்ந்து தள்ளிய அஜய் ஜடேஜா!

அபிஷேக் சர்மா தனித்துவமான ஸ்டைலில் விளையாடுவதாக அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார்.

ajay jadeja abhishek sharma

துபாய் :2025 ஆசியக் கோப்பையின் தொடக்கப் போட்டியில், துபாயில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக (UAE) போட்டியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் அபாரமான இன்னிங்ஸ் குறித்து முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா வர்ணனையின் போது பாராட்டினார். அபிஷேக், 16 பந்துகளில் 30 ரன்கள் (3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) அடித்து, இந்தியாவின் 57 ரன்கள் இலக்கை 4.3 ஓவர்களில் துரத்தி, 9 விக்கெட் வெற்றியை உறுதி செய்தார். இந்த போட்டி, இந்தியாவின் தொடக்க ஜோடியான அபிஷேக் மற்றும் ஷுப்மன் கில்லின் (20* ரன்கள், 9 பந்துகள்) ஆக்ரோஷமான ஆட்டத்தால், பவர் ப்ளே முடிவதற்கு முன்பேயே முடிந்தது.

இந்த நிலையில், அஜய் ஜடேஜா, வர்ணனையின் போது, அபிஷேகின் முதல் பந்தில் அடித்த சிக்ஸ் குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் “அபிஷேக் அடிக்கும் போது, யாரோ ஒருவரை அவர் அறைந்து கொடுக்கும் போல தோன்றுகிறது. மக்கள் இந்திய பேட்டிங் தொடங்கப் போகிறது என்று நினைக்கும் போது, அவர்கள் போட்டியை 4.3 ஓவர்களில் முடித்துவிட்டனர். இது முதல் பந்த்தான். அவர் எந்த மரியாதையும் காட்டுவதில்லை,” என்று அவர் கூறினார்.

பிஷேகின் தனித்துவமான ஆட்டம், அவரது சொந்த பாணியை பிரதிபலிப்பதாக ஜடேஜா விரிவாக பேசினார். ஜடேஜா மேலும், “அவன் தனியாக ஒரு ஸ்டைல் கொண்டவன். உலகம் முழுவதும் அனைவரும் ஓன்-சைடில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிக்கிறார்கள். அவன் ஓன்-சைடில் அடிப்பதில்லை என்று இல்லை, ஆனால் அவன் ஆஃப்-சைடை விரும்புகிறான். அனைத்து பயிற்சியாளர்களும் ஆஃப்-ஸ்டம்பின் வெளியே பந்து வீசச் சொல்கிறார்கள், அவன் அங்கேயே வேகமாக ஆடுகிறான்,” என்று பாராட்டினார்.

அதனைத்தொடர்ந்து, இந்த தொடக்க ஜோடியான அபிஷேக் மற்றும் சுப்மன் கில்லைப் பற்றியும் பேசினார். “இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி நினைத்தால், அவர்கள் சிறு வயதில் தங்கள் கிளப்பில் விளையாடும்போது, போலி பள்ளி அணிகளை அடித்து வெல்வார்கள். அது இந்தியாவுக்காக விளையாடும்போது, UAE போன்ற அணிகளுக்கு எதிராகவும் நடக்கிறது. அவர்கள் அந்த கனவை வாழ்கின்றனர், போட்டியை இப்படி முடிப்பது அவர்களின் கனவு,” என்று கூறினார்.

அதன்பிறகு அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லைப் பற்றி அவர்களுடைய பார்ட்னர்ஷிப் குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். இது பற்றி பேசிய அவர் “இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி நினைத்தால், அவர்கள் சிறு வயதில் தங்கள் கிளப்பில் விளையாடுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சிறிய வயதில் அவர் இப்படி விளையாடுவதை பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது, இன்னும் வரும்காலத்தில் சிறப்பாக விளையாடுவார்கள். அவர்கள் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்கள் என்றாலும் கூட, அவர்களுடைய மனதில் போட்டியை முடித்துக்கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் தான் இருக்கிறது” எனவும் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.