டெல்லி : கேபிடல்ஸ் (DC) அணிக்காக விளையாடும் 36 வயதான ஸ்டார்க், தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இதனால் அணியின் முதல் இரண்டு போட்டிகளை ஏற்கனவே தவறவிட்ட அவர், அடுத்த மூன்று ஆட்டங்களையும் (மொத்தம் ஐந்து போட்டிகள்) தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக பிக் பாஷ் லீக்கில் ஐந்து போட்டிகளில் மட்டுமே ஸ்டார்க் விளையாடினார். அதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் ஆடி, 31 விக்கெட்டுகள் வீழ்த்தி ‘ப்ளேயர் ஆஃப் தி டூர்னமென்ட்’ விருதை வென்றிருந்தார்.
அடுத்ததாக ஐபிஎல் போட்டியில் காயம் சரியாக அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் அவருக்கு காயம் சரியாகவில்லை. அறிக்கைகளின்படி, ஸ்டார்க் ஏப்ரல் 20 வரை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைய வாய்ப்பில்லை. இதனால் அவர் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ், ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஏப்ரல் 18-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளைத் தவறவிடுவார்.
அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தால் , ஏப்ரல் 19 அல்லது 20-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு டெல்லி அணியுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்டார்க் தற்போதைய காலகட்டத்தில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி அணியின் கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த அவர், 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார் (ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் உட்பட).
2026 சீசனுக்கு முன்பு அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்தார்.ஸ்டார்க் இல்லாத நிலையிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாகத் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை வீழ்த்தியது. டி. நடராஜன் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் லக்னோவுக்கு எதிராக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மும்பைக்கு எதிராக முகேஷ் குமார் ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியை வலுப்படுத்தினார். இப்படி இருக்கையில் ஸ்டார்க்கும் அணிக்கு திரும்பினார் என்றால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
