#T20 World Cup 2022: நியூசிலாந்து பௌலர்கள் அபாரம், இலங்கையை எளிதாக வென்றது நியூசிலாந்து.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில்  இலங்கைக்கு மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸை தவிர மற்ற எந்த வீரரும் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை.

சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ், 104 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி அடுத்து களமிறங்கியது.

இலங்கை அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அனைவரும் வந்த வேகத்தில் கிளம்பினர். அதிகபட்சமாக கேப்டன் தாசுன் சனாகா  35 ரன்களும், பனுகா ராஜபக்சா 34 ரன்களும் எடுத்தனர், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்குடனும் டக் அவுட்டும் ஆகினர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி  102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்