#T20WorldCup2021:நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ், நீஷம் அதிரடி- நமீபியா அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

T20 World Cup 2021: New Zealand's Glenn Phillips, Neesham Action - Namibia score 164!

நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,சூப்பர் 12 குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்டில், டேரில் மிட்செல் களமிறங்கி நிதானமாக விளையாடினர்.

ஆனால்,18 ரன்கள் எடுத்த நிலையில் கப்டில் 4 வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற,கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இதற்கிடையில்,டேரில் மிட்செல் 6 வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து,இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து அதிராடியாக விளையாடி வந்த கேப்டன் வில்லியம்சன் 28 ரன்கள் எடுத்த நிலையில், ஈராஸ்மஸ் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின்னர்,இறங்கிய கான்வே ரன் அவுட் ஆக,கிளென் பிலிப்ஸ், நீஷம் களமிறங்கி அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இறுதியில்,20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.கிளென் பிலிப்ஸ் 39*,நீஷம் 35*.

நமீபியா அணியை பொறுத்தவரை ஷால்ட்ஸ்,வைஸ்,எராஸ்மஸ் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்.