டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.
ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியின் தேடுதலில் பிசிசிஐ கடந்த 2 மாதங்களாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும் மும்பையில் உள்ள பிசிசிஐ செயலகத்தில் சந்தித்து இந்திய அணி தேர்வை பற்றி ஆலோசித்து பேசினார்கள்.
அந்த சந்திப்பில் பல ஆலோசனைகளையும், அணியை தீர்மானிக்க பல முடிவுகளையும் அவர்கள் எடுத்தனர். அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் பந்து வீச வேண்டும் அதில் நன்றாக செயல்பட்டால் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும், மேலும் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் இந்திய அணியில் இடம் உண்டு என்று இது போன்ற சில அதிரடி முடிவுகள் எடுத்தனர்.
மேலும், இன்றைய நாளில் பிசிசிஐ இந்திய அணியின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள், இந்த கூட்டத்தில், ‘ஐபிஎல்லை கருத்தில் கொண்டு இந்திய அணியை நாங்கள் எடுக்கவில்லை என அந்த சந்திப்பு நிறைவடைந்ததும் பிசிசிஐ அறிவித்தது.
தற்போது, இந்திய அணியின் கிரிக்கெட் வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வ டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளனர். இந்த அணியில் பலரும் எதிர் பார்த்த சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் மாற்று வீரராக ரிங்கு சிங், ஸுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளனர் மற்றும் பலரும் எதிர்ப்பார்த்த ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறவில்லை இதனால் ரசிகர்கள் அதிரிச்சியில் உறைந்துள்ளனர்.
பிசிசிஐ தேர்வு செய்த 15 வீரர்கள்
ரோஹித் சர்மா (c), ஹர்திக் பாண்டியா (vc), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) , சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங் , முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா.
மாற்று வீரர்கள்
சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025