பாகிஸ்தான் அமைச்சருடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ் – வைரலாகும் வீடியோ.!

ஆசிய கோப்பை 2025 க்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்பான இரு முக்கிய கைகுலுக்கல் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

AsiaCup - SuryaKumarYadav

துபாய் :ஆசிய கோப்பை 2025 அபுதாபியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றியுடன் தொடங்கியது. இன்று (செப்டம்பர் 10) நடைபெறும் போட்டியின் இரண்டாவது போட்டியில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸை (யுஏஇ) எதிர்கொள்ளும். இதன் பிறகு, 14 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

இந்த நிலையில், ஆசிய கோப்பை 2025  போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவருமான மொஹ்சின் நக்வியுடன் கைகுலுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரவலான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த சம்பவம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றங்கள், குறிப்பாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் எல்லைப் பிரச்சினைகளின் பின்னணியில், சில இந்திய ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

unknown node

சிலர் இந்த கைகுலுக்கலை “வெட்கக்கேடு” என்று விமர்சித்து, மொஹ்சின் நக்வியின் இந்திய எதிர்ப்பு கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், இந்த நிகழ்வு ஒரு மரியாதைக்குரிய சைகையாகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவராக மொஹ்சின் நக்வியின் பொறுப்புக்கு ஏற்ப நடந்ததாகவும் சிலர் கருதுகின்றனர். மற்ற அணிகளின் கேப்டன்களுடனும் மொஹ்சின் நக்வி கைகுலுக்கியதாக தகவல்கள் உள்ளன.

மறுக்கம், சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுக்கு இடையே கைகுலுக்கல் நடக்கவில்லை என்று ஒரு குறுகிய வீடியோ கிளிப்பால் சமூக ஊடகங்களில் தவறான புரிதல் ஏற்பட்டது. இது இரு அணிகளுக்கு இடையே மோதல் இருப்பதாக விவாதங்களைத் தூண்டியது. ஆனால், முழு வீடியோ வெளியான பிறகு, இருவரும் மரியாதையுடன் கைகுலுக்கியது தெரியவந்தது.

unknown node