ஒரே உறையில் இரண்டு கத்திகள்: டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்!!
- 12வது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது
- டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெல்லி கேப்பிடல் என பெயரை மாற்றி உள்ளது
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலியை நியமித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இருவரும் எதிரெதிர் அணியில் ஆடிய போது இருவருக்கும் சுத்தமாக ஆகாது. இதனால் ஒரே உறையில் இரண்டு கத்திகள் எப்படி செயல்படுப்போகின்றன என பார்க்க ரசிகர்களும் விமர்சகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.