இந்திய அணியின் முன்னாள் கேப்டன், BCCI தலைவர், ‘பெங்கால் டைகர்’ ‘தாதா’ சவ்ரவ் கங்குலிக்கு இன்று 50-வது பிறந்தநாள்.
1972ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது முழுப்பெயர் சவ்ரவ் சண்டிதாஸ் கங்குலி.
unknown nodeஇவருக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு வெறி என்றால், இவர் கிரிக்கெட் தேர்வுக்கு செல்லும் போது இவருக்கு அப்போது பெரும்பாலானோர் போல வலது கை பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். அதன் பிறகு வலது கை பேட்ஸ்மேன் அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளார் என்பதை அறிந்த கங்குலி, பிறகு தீவிர பயிற்சி மேற்கொண்டு இடதுகை பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
unknown nodeஅதுவரை அமைதியாக இருக்கும் இடம் தெரிந்த இந்திய கிரிக்கெட் அணியை, கங்குலி கேப்டன் பதவி ஏற்ற பின்பு உலகமே நிமிர்ந்து பார்க்க தொடங்கியது என்பதே நிஜம்.
தங்கள் அணிக்கு எப்படி எதனை கொடுத்தாலும் திருப்பி இரட்டிப்பாக கொடுப்பதில் கைதேர்ந்தவர். அதற்க்கு சிறந்த உதாரணம் 2002ஆம் ஆண்டு மும்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோற்றபோது, இங்கிலாந்து வீரர் சட்டையை கழற்றி மைதானத்தை சுற்றி வீரர்களை அவமானப்படுத்தி விட்டார்.
unknown nodeஅதற்கு பழிக்குப்பழியாக 2002 இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்ததும், கங்குலி, தனது ஜெர்சியை கழட்டி கொண்டாடும் போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ந்து போனது. அமைதியாக இருக்கும் இந்தியாவா இப்படி ஆக்ரோஷமாக கொண்டாடுகிறது என வியந்து பார்த்தனர்.
unknown nodeஇப்படி பல போட்டிகளில் இந்திய அணியை தலைமிர வைத்துள்ளார் சவ்ரவ் கங்குலி. இன்னும் கிரிக்கெட்டில் தான் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ-க்கு தலைவராகவும், கிரிக்கெட் வரணையாளராகவும் செயல்பட்டு வரும் பெங்கால் டைகர் கங்குலிக்கு இன்று 50-வது பிறந்தநாள்.