அப்போ…தோல்வி அடைந்தால் இந்தியா வீட்டுக்கு தானா? அப்படி என்ன சிக்கல் தெரியுமா?

டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்கு ஒரு முக்கியமான போட்டி என்றே கூறலாம்.
அதற்கு மிக முக்கிய காரணம் சூப்பர் 8 சுற்றின் இறுதி போட்டி ஆஸ்திரேலிய அணியுடன் என்பதால் தான். தற்போது உள்ள புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணி நல்ல ஒரு ரன்ரேட்டை கொண்டுள்ளது.
ஆனால், இன்றைய போட்டியில் மட்டும் இந்தியா அணி தோல்வியை கண்டால் அந்த ரன்ரேட் குறைந்து விடும். மேலும், வங்கதேச அணிக்கும் 2 புள்ளிகள் கிடைத்துவிடும். இதன் காரணமாக இந்திய அணி இன்றைய போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.
ஒரு வேளை இந்த போட்டியிலும், அடுத்த போட்டியான 24-ம் தேதி அன்று நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியிலும் தோல்வியை கண்டால் 2 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையோ அல்லது வெளியேற கூடிய சூழ்நிலையோ ஏற்பட்டு விடும்.
இதனால், இந்த போட்டியின் வெற்றி என்பது மிகமுக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதை இப்போது நினைவு படுத்துவதற்கான காரணம் என்னவென்றால் மிக முக்கியமான சர்வேதேச போட்டிகளில் வங்கதேச அணி இந்திய அணியை வெற்றி பெற்று அத்தொடரிலிருந்து வெளியேற்றவும் செய்திருக்கிறது.
மேலும், ஆஸ்திரேலியா அணி மிக வலிமையான ஒரு அணியாக இருந்து வருகின்றனர். இது வரை இந்த தொடரில் தோல்வியே காணாமல் விளையாடி வருகின்றனர். மேலும், நாளை காலை ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற இருக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.
இந்த போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றார் என்றால் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் போட்டியானது மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்த போட்டியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025