கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரராலும் முடியாது ..! சச்சின் சாதனையை முறியடிக்க சேவாக் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டிகளிலும் சில சாதனைகளை படைத்து வருகிறார். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிந்தும் வருகிறார்.
இந்நிலையில் சச்சினின் ஒரு சாதனை மட்டும் விராட் கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரரும் முறியடிக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில் , விராட் கோலி தற்போது சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இதைத் தொடர்ந்து பல சதம் அடித்து , அதிக ரன்கள் குவித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் சச்சினின் ஒரு சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் .இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன் என்று சேவாக் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025